கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என கருதப்படுபவர் போர்ச்சுகீஸ் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் தற்போது போர்ச்சுகல் நேஷன்ஸ் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ரொனால்டோவிற்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இத்தகவலை போர்ச்சுகீஸ் கால்பந்து அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து போர்ச்சுகீஸ் வெளியிட்டுள்ள பதிவில், “கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, அவர் தேசிய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஸ்வீடன் அணிக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் 2020: வீரர்கள், பயிற்சியாளருக்கு கரோனா உறுதி!