லண்டன் (இங்கிலாந்து): ஐரோப்பியா நாடுகளின் முன்னணி அணிகள் மோதிய யூரோ கோப்பை 2020 கால்பந்து தொடரை 53 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி அணி வென்றுள்ளது.
இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 கோல்கள், 1 அசிஸ்ட் மூலம் முதலிடம் பிடித்து கோல்டன் பூட் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் செக் குடியரசு வீரர் பேட்ரிக் ஷிக் 5 கோல்கள் அடித்திருந்தாலும், அசிஸ்ட்டுகள் ஏதும் இல்லாததால் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஃபிரான்ஸ் வீரர் கரீம் பென்சிமா, ஸ்வீடனின் எமில் ஃபோர்ஸ்பெர்க், பெல்ஜியத்தின் ரொமிலு லுகாகு ஆகியோர் நான்கு கோல்கள் அடித்திருக்கின்றனர்.
யூரோ கால்பந்துத் தொடரில் ரொனால்டோ பெரும் முதல் கோல்டன் பூட் விருது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெனால்டியில் வென்றது இத்தாலி; 53 வருடங்களுக்கு பின் ரோம் செல்லும் யூரோ கோப்பை!