சீரி ஏ கால்பந்து தொடர் இத்தாலியின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (ஜன. 11) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி - சசுவோலோ அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலேதுமின்றி சமனில் முடிந்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணியின் டனிலோ ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில் சசுவோலோ அணியின் கிரேகோயர் டிஃப்ரல் ஆட்டத்தின் 58ஆவது நிடத்தில் கோலடித்தார்.
அதன்பின் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுவென்டஸ் அணியின் ஆரோன் ரம்செய் 82ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பிறகு ஆட்டத்தில் கிடைத்த கூடுதல் நேரமான 90+2ஆவது நிமிடத்தில் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
-
FULL-TIME ⚽⚽⚽
— JuventusFC (@juventusfc) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
L’abbiamo 𝗰𝗲𝗿𝗰𝗮𝘁𝗮.
L’abbiamo 𝘁𝗿𝗼𝘃𝗮𝘁𝗮.
Tre punti importantissimi! 💪
Ancora una volta #FINOALLAFINE!#JuveSassuolo #ForzaJuve ⚪⚫ pic.twitter.com/V7wyQWyjcq
">FULL-TIME ⚽⚽⚽
— JuventusFC (@juventusfc) January 10, 2021
L’abbiamo 𝗰𝗲𝗿𝗰𝗮𝘁𝗮.
L’abbiamo 𝘁𝗿𝗼𝘃𝗮𝘁𝗮.
Tre punti importantissimi! 💪
Ancora una volta #FINOALLAFINE!#JuveSassuolo #ForzaJuve ⚪⚫ pic.twitter.com/V7wyQWyjcqFULL-TIME ⚽⚽⚽
— JuventusFC (@juventusfc) January 10, 2021
L’abbiamo 𝗰𝗲𝗿𝗰𝗮𝘁𝗮.
L’abbiamo 𝘁𝗿𝗼𝘃𝗮𝘁𝗮.
Tre punti importantissimi! 💪
Ancora una volta #FINOALLAFINE!#JuveSassuolo #ForzaJuve ⚪⚫ pic.twitter.com/V7wyQWyjcq
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஜுவென்டஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சசுவோலோ அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலன் சீரி ஏ புள்ளிப்பட்டியலில் 33 புள்ளிகளைப் பெற்று ஜுவென்டஸ் அணி 4ஆம் இடத்தை தக்கவைத்தது.
இப்போட்டியில் ஜுவென்டஸ் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் தனது 759ஆவது கோலைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் கிளப், தேசிய அணிக்களுக்காக விளையாடி அதிக கோல்களை அடித்த வீரர் என்ற ஆஸ்திரியாவின் ஜோசப் பிகானின் (759) சாதனையைச் சமன் செய்துள்ளார்.
முன்னதாக கால்பந்து விளையாட்டில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிட்னி டெஸ்ட்: சாதனைப் படைத்த புஜாரா!