கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் அந்நாட்டில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இங்கிலாந்து முழுவதும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் இப்பெருந்தொற்றால் அனைத்து வகையான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்துவரும், தேசிய சுகாதார சேவை அமைப்பு மற்றும் ஒரு சில தொண்டு நிறுவன ஊழியர்கள் என அனைவருக்கும் இங்கிலாந்து கால்பந்து கிளப்பான செல்சி இலவசமாக உணவளித்து வந்தது.
தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுகளை இலவசமாக வழங்குவதாக செல்சி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Further news of the club's response to the coronavirus pandemic...
— Chelsea FC (at 🏡) (@ChelseaFC) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Further news of the club's response to the coronavirus pandemic...
— Chelsea FC (at 🏡) (@ChelseaFC) May 15, 2020Further news of the club's response to the coronavirus pandemic...
— Chelsea FC (at 🏡) (@ChelseaFC) May 15, 2020
இது குறித்து செல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் தேசிய சுகாதார சேவை அமைப்பு ஊழியர்களுக்கும், தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் மேலும் இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுகளை இலவசமாக வழங்க செல்சி அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த மேரி கோம்!