உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 49 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு மக்கள் அனைவரையும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள்விடுத்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான செல்சியின் நட்சத்திர வீரர் கலும் ஹட்சன்-ஓடோய் திங்கள்கிழமை அதிகாலை தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மாடல் நடிகையை தனது வீட்டிற்கு வரும்படி கார் அனுப்பியதாகவும், பின் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அவரை இங்கிலாந்து காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட ஹட்சன் ஓடோய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து காவல் துறை கூறுகையில், "கால்பந்து வீரர் ஹட்சன் ஓடோய் அரசின் தகுந்த இடைவெளி கட்டுப்பாட்டை மீறியதாகவும், மாடல் அழகியை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தற்போது ஹட்சன் செய்த மேல்முறையீடு காரணமாக அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஜூன் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:‘நானும் அவரும் ஒன்றல்ல’ - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆசாம்!