2020ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்த்து ரியல் மாட்ரிட் அணி ஆடியது. ஏற்கனவே நடந்த முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதால், இந்த ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் மொத்தமாக 4-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜுவண்டஸ் அணியை எதிர்த்து லயன் அணி ஆடியது. அந்தப் போட்டியில் ஜுவண்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனிடையே மொத்தமாக 2-2 என்ற கணக்கில் கோல் சமன் செய்யப்பட்டது. இந்நிலையில், வெளிநாட்டு மைதானத்தில் அதிக கோல்கள் அடித்த எண்ணிக்கையின் அடிப்படையில் லயன் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதனால் லிஸ்பானில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்த்து லயன் அணி ஆடவுள்ளது.
இதையும் படிங்க: பாக். எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு நம்பிக்கை கொடுத்த ஸ்டோக்ஸ்!