ETV Bharat / sports

மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டத்தால் காலிறுதியில் நுழைந்த பார்சிலோனா!

author img

By

Published : Aug 9, 2020, 7:33 PM IST

யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் மதிப்பீட்டு ஆட்டத்தில் பார்சிலோனா அணி 4-2 என்ற கொல்கணக்கில் நபொளி(Napoli) அணியை விழத்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

champions-league-lionel-messi-unstoppable-as-barca-beats-napoli-to-reach-last-8

யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற மதிப்பீட்டு ஆட்டத்தில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல்கணக்கில் நபொளி அணியை விழத்தி, சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

குறிப்பாக இந்த போட்டியில் 23ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனால் மெஸ்ஸி கோலடித்ததன் மூலம், இந்த சீசனில் தனது 33ஆவது கோலைப் பதிவு செய்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி 13ஆவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.

முன்னதாக இன்று நடைபெற்ற மற்றோரு மதிப்பீட்டு ஆட்டத்தில் பெயர்ன் அணி 7-1 என்ற கோல்கணக்கில் செல்சி அணியை வீழத்தி சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

இதன் மூலம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரின் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் பெயர்ன் அணி, பார்சிலோனா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.