ETV Bharat / sports

கடைசி நேரத்தில் நடப்பு சாம்பியன் லிவர்பூலை வெளியேற்றிய அத்லெடிக்கோ மாட்ரிட்! - கால்பந்தாட்ட செய்திகள்

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் விதிதத்தில் நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Champions League: Defending champions Liverpool knocked out by Atletico Madrid

author img

By

Published : Mar 12, 2020, 2:35 PM IST

கொரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நடப்பு சாம்பியன் லிவர்பூல் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் நேற்று லிவர்பூலில் உள்ள அன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது.

முன்னதாக, மாட்ரிட்டில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் சுற்று போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இதனால், சொந்த மண்ணில் லிவர்பூல் அணி கம்பேக் தரும் என்ற எதிர்பார்ப்போடு அவர்களது ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். இதைத்தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்திலேயே ஈடுபட்ட லிவர்பூல் அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன.

Champions League
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள்.

குறிப்பாக, லிவர்பூல் அணியின் முன்கள வீரர்களான ஃபிர்மினோ, சாடியோ மானே ஆகியோர் அடித்த பல ஷாட்டுகளை அத்லெடிகோ மாட்ரிட் அணியின் கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் சிறப்பாக தடுத்தார். இருப்பினும், ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஜார்ஜினோ விஜ்னால்டியம் ஹெட்டர் முறையில் கோல் அடித்து அசத்த முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது பாதியில் மீண்டும் லிவர்பூல் அணி ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் அவர்களால் கோல்கீப்பர் ஜான் ஒப்லாக்கை கடந்து கோல் அடிக்க முடியாமல் திணறினர். ஆட்டத்தின் 94ஆவது நிமிடத்தில் ஃபிர்மினோ கோல் அடிக்க, லிவர்பூல் அணி கோல் அடிப்படையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

Champions League: Defending champions Liverpool knocked out by Atletico Madrid
லிவர்பூல் அணிக்கு இரண்டாவது கோலை அடித்த ஃபிர்மினோ.

இந்த நிலையில், ஆட்டத்தில் கூடுதலான நேரம் வழங்கப்பட்டன. இதனை பயன்படுத்திகொண்ட அத்லெடிகோ மாட்ரிட் அணி, அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது. குறிப்பாக, அத்லெடிகோ மாட்ரிட் வீரர் மார்கஸ் லொரண்டே லிவர்பூல் அணியின் டிஃபெண்டர்களை கடந்து 97, 106ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் அத்லெடிகோ மாட்ரிட் வீரர் மார்கஸ் லொரண்டே.

பின் ஆட்டத்தின் கடைசி நிமிடமான 120ஆவது நிமிடத்தில் மார்கஸ் லொரண்டே அசிஸ்ட் செய்ய, சக வீரர் அல்வெரோ மொரட்டா கோல் அடித்தார். இதனால், அத்லெடிகோ மாட்ரிட் அணி 3-2 என்ற கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம், நடந்து முடிந்த இரண்டு நாக் அவுட் சுற்றுகளையும் சேர்த்து அத்லெடிகோ மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் அடிப்படையில் நடப்பு சாம்பியன் லிவர்பூலை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பந்தை கோலுக்கு போகாமல் தடுத்த அத்லெடிகோ மாட்ரிட் கோல்கீப்பர் ஜான் ஓப்லாக்.

நடப்பு சீசனில் (இங்லிஷ் ப்ரீமியர் லீக் + சாம்பியன்ஸ் லீக்) இதுவரை சொந்த மண்ணில் விளையாடிய 25 போட்டிகளில் 24 வெற்றி, ஒரு டிரா என, ஒரு தோல்வியையும் தழுவாமல் இருந்த லிவர்பூல் அணி நேற்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: இத்தாலி கால்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.