ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் காடிஸ் எஃப்சி அணி - செல்டா விகோ அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்டோ விகோ அணியின் நோலிடோ ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் கோலடித்து, அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய இகோ அஸ்பஸ் அதனை கோலாக மாற்றி அசத்தினார்.
அதன் பின் முதல் பாதி ஆட்டத்தில் கிடைத்த கூடுதல் நேரமான 45+1 ஆவது நிமிடத்தில் செல்டோ விகோ அணியின் மெண்டீஸ் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் செல்டோ விகோ அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் காடிஸ் அணி கோலடிக்க எடுத்த முயற்சிகளை செல்டோ விகோ அணி முறியடித்தது.
இதனால் ஆட்டநேர முடிவில் செல்டோ விகோ அணி 4-0 என்ற கோல் கணக்கில் காடிஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லாலிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:பிபிஎல்: ஹரிகேன்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!