பொதுவாக, உற்சாக வெள்ளத்தில் இருக்கும்போது நாம் என்ன செய்வோம் என்பது நமக்கே தெரியாது. பல சமயங்களில் இந்த உற்சாகம் நமக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் மாறிவிடும். அந்த வகையில், பிரேசில் கால்பந்து ரசிகரின் உற்சாகமும் இதுபோலதான் மாறியுள்ளது.
பிரேசில் நாட்டில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலமானவை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சாவ் பாலோ நகரில் நடைபெற்ற போட்டியில் சமபலம் பொருந்திய சாவ் பாலோ - கிரேமியோ அணிகள் மோதின. இப்போட்டியை 67 ஆயிரம் ரசிகர்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்ட கேலரியில் அமர்ந்துகொண்டு பார்வையிட்டனர்.
-
Momento que o torcedor do São Paulo cai da arquibancada do Morumbi. O torcedor foi socorrido e levado para o hospital. pic.twitter.com/pjiTJGG5XA
— Liberta Depre (@liberta__depre) August 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Momento que o torcedor do São Paulo cai da arquibancada do Morumbi. O torcedor foi socorrido e levado para o hospital. pic.twitter.com/pjiTJGG5XA
— Liberta Depre (@liberta__depre) August 31, 2019Momento que o torcedor do São Paulo cai da arquibancada do Morumbi. O torcedor foi socorrido e levado para o hospital. pic.twitter.com/pjiTJGG5XA
— Liberta Depre (@liberta__depre) August 31, 2019
அப்போது, அளவுகடந்த மகிழ்ச்சியில் மிதந்த ரசிகர் ஒருவர், 40 அடி உயர (மூன்றாவது) கேலரியில் இருந்து தவறி, கீழ் கேலரியில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமி மீது வீழ்ந்துள்ளார்.
இதையடுத்து, 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ரசிகரின் பெயர் லாகோ டி மெலோ ரியோஸ் என்பதும் அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. அதேசமயம், ஜியோவானா சான்டோஸ் என்கிற 13 வயது சிறுமிக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் ரசிகர் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.