இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) ஆறாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதன் முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, அத்லெடிக்கோ கொல்கத்தாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்தே சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி கோல் அடிக்கும் முனைப்பில்தான் விளையாடியது. அட்டாக்கிங் முறையில் ஆடிய அந்த அணிக்கு முதல் பாதியில் கோல் அடிக்க ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால், சரியான ஃபினிஷிங் இல்லாததால் பெங்களூரு அணி கோலடிக்க முடியாமல் போனது. குறிப்பாக, 16ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் அஷிக் குருனியனுக்கு கோல் அடிப்பதற்கு கிடைத்த அரிய வாய்ப்பை வீணடித்தார். இதையடுத்து, கவுன்டர் அட்டாக் ஆட்டத்தில் ஈடுபட்ட நார்த்ஈஸ்ட் யுனைடெட் வீரர் அசமோஹ் கியான் அடித்த கோல், ஆஃப் சைட் காரணமாக ரத்தானது.
-
.@ASAMOAH_GYAN3's f̶i̶r̶s̶t̶ ̶#̶H̶e̶r̶o̶I̶S̶L̶ ̶g̶o̶a̶l̶ offside! 🚫
— Indian Super League (@IndSuperLeague) October 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch #BENNEU LIVE on @hotstartweets - https://t.co/2e6OM7DOJU
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #LetsFootball #TrueLove pic.twitter.com/ywU9fhgazj
">.@ASAMOAH_GYAN3's f̶i̶r̶s̶t̶ ̶#̶H̶e̶r̶o̶I̶S̶L̶ ̶g̶o̶a̶l̶ offside! 🚫
— Indian Super League (@IndSuperLeague) October 21, 2019
Watch #BENNEU LIVE on @hotstartweets - https://t.co/2e6OM7DOJU
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #LetsFootball #TrueLove pic.twitter.com/ywU9fhgazj.@ASAMOAH_GYAN3's f̶i̶r̶s̶t̶ ̶#̶H̶e̶r̶o̶I̶S̶L̶ ̶g̶o̶a̶l̶ offside! 🚫
— Indian Super League (@IndSuperLeague) October 21, 2019
Watch #BENNEU LIVE on @hotstartweets - https://t.co/2e6OM7DOJU
JioTV users can watch it LIVE on the app.#ISLMoments #LetsFootball #TrueLove pic.twitter.com/ywU9fhgazj
42ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு வழங்கப்பட்ட கார்னர் கிக்கின் போது அடிக்கப்பட்ட பந்து, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் டிஃபெண்டர் கெய் ஹீரிங்க்ஸின் கை மீது பட்டது. ஆனால், நடுவர் இதற்கு பெனால்டி கிக் வழங்காததால் சுனில் சேத்ரி மிகவும் அதிருப்தி அடைந்ததால் முதல் பாதி முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதியில் அவ்வப்போது தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் நார்த்ஈஸ்ட் அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக, 52ஆவது நிமிடத்தில் அந்த அணி வீரர் அசமோஹ் கியான் அடித்த பந்த கிராஸ்பார் (கோல் கம்பம்) மீது பட்டு வெளியே சென்றது. இறுதிவரை பெங்களூரு அணியை கோலடிக்காமல் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி சிறப்பாக டிஃபெண்ட் செய்தது. இதனால், பெங்களூரு எஃப்சி - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது.
நடப்பு சாம்பியன் பெங்களூரு அணிக்கு இப்போட்டியில் கோலடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில், ஜாம்ஷெட்பூர் - டெல்லி டைனமோஸ் அணிகள் மோதவுள்ளன.