விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரையில் எந்த விளையாட்டிலும் ஆடவர் அணிக்கு நிகரான ஊதியம் மகளிர் அணிக்கு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கால்பந்து சங்கத்தில், ''நிறுவனமயமாக்கப்பட்ட பாலியல் பாகுபாடு'' காட்டப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டது.
அதில் ஆடவர் அணிக்கு நிகராக மகளிருக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய கால்பந்து சங்கம் ''தி ஆஸ்திரேலியன்'' என்ற பத்திரிகையில் இதுகுறித்து பேசியுள்ளது. அதில், இனி ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் எனவும் இரு அணிகளின் விளையாட்டின் மூலம் ஈட்டப்படும் வருவாய் 50-50 என சமமாக பகிரப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சிலி அணிக்கு எதிராக நடைபெறும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாண்டியாவிற்கு பதிலளித்த சாக்ஷி: ட்விட்டரை கலக்கிய பதிவு!