ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி - எஃப்சி கோவா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணியும் கோலேதும் அடிக்காகததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் விஸ்வரூபமெடுத்த ஏடிகே:
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதன் பயணாக அந்த அணியின் நட்சத்திர் வீரர் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி, அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.
-
A solitary goal courtesy of a @RoyKrishna21 penalty gives us the all-important 3 points! 💚❤️#ATKMohunBagan 1 - 0 #FCGoa#JoyMohunBagan #Mariners #ATKMBFCG #IndianFootball pic.twitter.com/CUTZ5Zpui9
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A solitary goal courtesy of a @RoyKrishna21 penalty gives us the all-important 3 points! 💚❤️#ATKMohunBagan 1 - 0 #FCGoa#JoyMohunBagan #Mariners #ATKMBFCG #IndianFootball pic.twitter.com/CUTZ5Zpui9
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 16, 2020A solitary goal courtesy of a @RoyKrishna21 penalty gives us the all-important 3 points! 💚❤️#ATKMohunBagan 1 - 0 #FCGoa#JoyMohunBagan #Mariners #ATKMBFCG #IndianFootball pic.twitter.com/CUTZ5Zpui9
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 16, 2020
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி வரை போராடிய எஃப்சி கோவா அணியால், எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் முன்னிலை:
இந்த வெற்றியின் மூலம் ஏடிகே மோகன் பாகன் அணி 13 புள்ளிகளைப் பெற்று, ஐஎஸ்எல் புள்ளிபட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. அதேசமயம் எஃப்சி கோவா அணி எட்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியை ரஹானே சிறப்பாக வழிநடத்துவார்' - சச்சின் டெண்டுல்கர்