பிரபல கால்பந்து வீரர் மாரடோனா மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 60.
கால்பந்து ஜாம்பவானான டியாகோ மாரடோனாவுக்கு நவம்பர் 3ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 11ஆம் தேதி வீடு திரும்பினார்.
இந்த நிலையில், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் புகைப்பழக்கம், மதுவுக்கு அடிமையானதால் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டில் இவரது இதயம் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
2005ஆம் ஆண்டில் உடல் எடையைக் குறைக்க பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இருப்பினும் மீண்டும் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டது.
1986இல் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்தவர், டியாகோ மாரடோனா. பல்வேறு சாதனைகளைப் புரிந்த டியாகோ, ஓய்வுபெற்ற பிறகு கிம்னாசியா ஒய் எஸ்கிரிமாவின் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.