ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை: ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாவே

author img

By

Published : Oct 28, 2022, 7:22 AM IST

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாவே த்ரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை: ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாவே
டி20 உலகக் கோப்பை: ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாவே

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய (அக் 27) ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாவே அணிகள் மோதின. பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய கிரைக் எர்வின் தலைமையிலான ஜிம்பாவே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளுடன் 130 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சென் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தார். மேலும் பாகிஸ்தான் அணியின் முகம்மது வாஷிம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல் ஜிம்பாவே அணியின் ஷிகாந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாவே அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்கவைத்த சூர்யகுமார் யாதவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.