ETV Bharat / sports

தனிநபரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும் - இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா! - ரோகித் சர்மா

Rohit Sharma Cricket World Cup 2023: ஒவ்வொருவரின் தேவையைப் புரிந்து கொண்டு, சுதந்திரமாக அவர்களது இடத்தில் அவர்களின் பாத்திரத்தைச் செய்யவிடுவதே அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தர உதவும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Rohit Sharma
தனிநபரின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும் - இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 7:20 PM IST

டெல்லி: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அனைத்திலுமே வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திலிருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தாலும், கோலி மற்றும் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்கள்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் சரியான தொடக்கத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில், தனக்குண்டான பாணியிலேயே ரன்களை குவிக்கத் தொடங்கினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 131 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிரான 86 ரன்கள், வங்கதேசத்திற்கு எதிராக 48 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக 46 ரன்கள் என இதுவரையில் 311 ரன்கள் குவித்து, நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், இந்திய அணி தனது 6வது லீக் ஆட்டமாக வரும் 29ஆம் தேதி லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், ரோஹித் சர்மா ஒரு நிகழ்வில், அணியில் உள்ள அனைவரையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "முதலில் அணியில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் தேவையையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களில் விருப்பு வெறுப்புகளை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு குழுவைப் பற்றியது.

ஒரு தனிநபருக்கு என்ன தேவையாக இருக்கிறது என்பதை நான் அவர்களது இடத்திலிருந்து சிந்திக்கிறேன். மேலும், அதிர்ஷ்டவசமாக என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளனர். அணியின் வீரர்களும், ஊழியர்களும், அணிக்கு என்னைத் தேவை என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். அணியை வழிநடத்துவது என்பது எனக்கு இயல்பாக வரவில்லை. பல ஆண்டுகளாக அதை நான் கற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலமே தற்போது அதை நான் கையாண்டு வருகிறேன்.

அதேநேரம், ஒரு அணியின் வெற்றிக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டேன். மேலும், ஒவ்வொருவரின் தேவையைப் புரிந்து கொண்டு, சுதந்திரமாக அவர்களின் இடத்தில் அவர்களது வேலையைச் செய்யவிடுவது, வெற்றி பெறுவதற்கு அவசியம் என நினைக்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: India Vs England : இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்! அஸ்வினுடன் களமிறங்கும் இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.