ஐதராபாத் : 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரிமீயர் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள், வீராங்கனைகளை தக்கவைக்கும் காலக்கெடு கடந்த 15ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 13 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று மகளிருக்கான பிரிமீயர் லீக் போட்டி நடப்பாண்டு முதல் தொடங்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இடம் பெற்று உள்ளன.
நடப்பாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியனஸ் அணி கைப்பற்றியது. இறுதி ஆடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் ஆனது. 2024ஆம் அண்டுக்கான மகளிரி பிரிமீயர் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள், தங்களிடம் உள்ள வீரர்களை தக்கவைத்துக் கொள்ள கடந்த அக்டோபர் 15ஆம் தேதியை இறுதி நாளாக பிசிசிஐ அறிவித்து இருந்தது.
பிசிசிஐ விதித்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில், எந்தெந்த அணிகள் எத்தனை வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டது என்ற பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. அதன்படி நடப்பு சாம்பியன் மும்பை அதிகபட்சமாக 13 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டு உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹெய்லி மேத்யூஸ், யஷ்டிகா பாட்டியா உள்ளிட்ட 13 வீராங்கனைகளை தக்க வைத்து உள்ளது. ஒட்டுமொத்தமாக 5 அணிகளையும் சேர்த்து 60 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 21 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு சீசனில் இரண்டாவது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் 15 வீராங்கனைகள் தக்கவைத்து உள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 8 வீராங்கனைகளை தக்க வைத்து உள்ளது.
ஒட்டுமொத்த அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் :
டெல்லி கேபிட்டல்ஸ் :
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆலிஸ் கேப்சி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், மரிசான் கப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தியா, தனியா பத்தியா சாது.
வெளியேறப்பட்ட வீராங்கனைகள்: அபர்ணா மொண்டல், ஜாசியா அக்தர், தாரா நோரிஸ்.
குஜராத் ஜெயண்ட்ஸ் :
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வால்வார்ட், ஷப்னம் ஷகில், சினே ராணா, தனுஜா கன்வர்.
வெளியேற்றப்பட்ட வீராங்கனைகள்: அனாபெல் சதர்லேண்ட், அஷ்வனி குமாரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஹர்லி காலா, கிம் கார்த், மான்சி ஜோஷி, மோனிகா பட்டேல், பருணிகா சிசோடியா, சபினேனி மேகனா, சோபியா டன்க்லே, சுஷ்மா வர்மா.
மும்பை இந்தியன்ஸ் :
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், சோலி ட்ரையோன், ஹர்மன்ப்ரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், ஹுமைரா காசி, இசபெல் வோங், ஜின்டிமணி கலிதா, நடாலி ஸ்கீவர், பூஜா வஸ்த்ரகர், பிரியங்கா பாலா, சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா.
வெளியேற்றப்பட்ட வீராங்கனைகள்: தாரா குஜ்ஜர், ஹீதர் கிரஹாம்*, நீலம் பிஷ்ட், சோனம் யாதவ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆஷா ஷோபனா, திஷா கசத், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன்.
வெளியேற்றப்பட்ட வீராங்கனைகள்: டேனே வான் நிகெர்க், எரின் பர்ன்ஸ், கோமல் சன்சாத், மேகன் ஷட், பூனம் கெம்னார், ப்ரீத்தி போஸ், சஹானா பவார்.
உ.பி. வாரியர்ஸ் :
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: அலிசா ஹீலி, அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, லாரன் பெல், லட்சுமி யாதவ், பார்ஷவி சோப்ரா, ராஜேஸ்வரி கயக்வாட், எஸ்.யஷஸ்ரீ, ஸ்வேதா செஹ்ராவத், சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா.
வெளியேற்றப்பட்ட வீராங்கனைகள்: தேவிகா வைத்யா, ஷப்னிம் இஸ்மாயில், ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் ஷேக்.
இதையும் படிங்க : "இந்தியாவை இமாலய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிப்போம்" - வங்கதேச விக்கெட் கீப்பரின் தந்தை!