ETV Bharat / sports

Women's IPL: மும்பை இந்தியன்ஸ் மகளிர் 4-வது வெற்றி! - மும்பை இந்தியன்ஸ் அணி

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.

மகளிர் ஐபிஎல்
மகளிர் ஐபிஎல்
author img

By

Published : Mar 13, 2023, 7:34 AM IST

மும்பை: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச் 12) நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. மும்பை ப்ராபோன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், உ.பி. வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி 46 பந்துகளுக்கு 58 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தேவிகா வைதியா 6 ரன்கள் மட்டும் சேர்த்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த தஹிலா மெக்ராத் 37 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதையடுத்து கிரன் நேவ்கிர் 14 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 159 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்கை நோக்கு மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹோலி மேத்யூஸ் 12 ரன்கள் மட்டும் எடுத்து எக்லஸ்டோனால் வெளியேற்றப்பட்டார். மற்றொரு தொடக்க வீராங்கனை யாஷ்டிகா பாட்யா, சீரிய முறையில் ஆடி அணியை முன்னுக்கு கொண்டு சென்றார். பாட்டியா 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்கி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் கொண்டு சென்றார். மறுபுறம் அவருக்கு நட் சிவெர் பிரன்ட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அதிரடியாக ஆடி மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஹர்மன் ப்ரீத் கவுர் 33 பந்துகளில் ஒரு சிக்சர், ஒன்பது பவுண்ட்ரிகள் என 53 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். மேலும், நட் சிவெர் பிரன்ட் தன் பங்குக்கு 31 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்றது. இவர்கள் இருவரும் இணைந்து 17 ஓவரில் ஆட்டத்தை முடித்தனர்.

17 புள்ளி 3 ஓவர்களில் 2 விக்கெட்கள் மட்டும் இழந்து 164 ரன்களை முன்பை அணி குவித்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக தனது நான்கவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம்: 'கம்பேக்' கொடுத்த விராட் கோலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.