ETV Bharat / sports

WPL 2023: கோப்பையை வென்று வாகை சூடிய மும்பை அணி - MI W vs DC W Match Highlights

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி முதல் சீசனின் கோப்பையை கைப்பற்றியது.

மகளிர் பிரீமியர் லீக் 2023
மகளிர் பிரீமியர் லீக் 2023
author img

By

Published : Mar 26, 2023, 10:51 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 26) மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணியின் பேட்டர்கள் களமிறங்கி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 29 பந்துகளுக்கு 35 ரன்களை குவித்தார். அதேபோல ஷிகா பாண்டே 17 பந்துகளுக்கு 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்துகளுக்கு 27 ரன்களையும், மரிசான் கேப் 21 பந்துகளுக்கு 18 ரன்களையும் எடுத்தனர்.

மறுபுறம் பந்து வீச்சில் மும்பை வீராங்கனைகள் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளையும், அமிலியா கெர்ர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அந்த வகையில் 132 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை வீராங்கனைகள் பேட்டிங்கை தொடங்கினர்.

முதலில் களமிறங்கிய ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா கூட்டணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை அளித்தது. யாஸ்திகா 3 பந்துகளில் 4 ரன்களுடனும், மேத்யூஸ் 12 பந்துகளில் 13 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்த வந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 ஆவது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட்டானார்.

இருப்பினும் 39 பந்துகளுக்கு 37 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்ந்தார். நாட் ஸ்கிவர்-பிரண்ட் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் விளையாடி 55 பந்துகளுக்கு 60 ரன்களை குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதனிடையே அமிலியா கெர்ர் 8 பந்துகளுக்கு 14 ரன்களை எடுத்தார். இறுதியில் 19.3 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனிலேயே வாகை சூடியது மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மும்பை பிளே லெவன்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமிலியா கெர்ர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்.

டெல்லி பிளே லெவன்: மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (கீப்பர்), ராதா யாதவ், ஷிகா பாண்டே, மின்னு மணி.

மகளிர் பிரீமியர் லீக் 2023 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், உத்தரப் பிரதேசம் வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதல்போட்டி மார்ச் 4ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த அணிக்கு அடுத்து புள்ளிப்பட்டியலில் இடம்பெற்ற 2 அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் அரையிறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்தது. அதன்பின் கோப்பையும் தட்டி சென்றது.

இதையும் படிங்க: உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கம் - வீராங்கனை நிகத் சரீன் சாதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.