ETV Bharat / sports

மகளிர் பிரீமியர் லீக் 2023.. பெங்களூரு அணி தோல்வி.. ஷஃபாலி வர்மா அபாரம்.. - delhi capitals vs royal challengers bangalore

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 2ஆவது ஆட்டத்தில் டெல்லி அணி, பெங்களூரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மகளிர் பிரீமியர் லீக் 2023
மகளிர் பிரீமியர் லீக் 2023
author img

By

Published : Mar 5, 2023, 7:28 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று (மார்ச் 5) மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 2ஆவது ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடன் மோதியது.

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 45 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்தார். அதேபோல டெல்லி கேப்டன் மெக் லானிங் 43 பந்துகளுக்கு 72 ரன்களையும், மரிசான் கேப் 17 பந்துகளுக்கு 39 ரன்களையும் எடுத்தனர். குறிப்பாக, மெக் லானிங் 14 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார்.

மறுப்புறம் பந்து வீச்சில் பெங்களூரு அணியின் ஹீதர் நைட் மட்டுமே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அந்த வகையில், 224 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சோஃபி டெவின் 11 பந்துகளில் 14 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து வந்த எலிஸ் பெர்ரி ரன்களை குவிக்க ஆம்பித்தார். இருப்பினும், தாரா நோரிஸ் பந்து வீச்சில் விக்கெட்டானார். இவருக்கு அடுத்த வந்த திஷா கசட் மற்றும் கீப்பர் ரிச்சா கோஷ் முறையே 9, 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹீதர் நைட் 34 ரன்களில் ஆட்டமிழந்தாா். இதையடுத்து கனிகா அஹுஜா, சோபனா ஆஷா ஆகியோரின் விக்கெட்டுகள் பறிபோனது.

மேகன் ஷட் ஆட்டமிழக்காமல் போராடியும் குறைவான பந்துகளே மீதம் இருந்ததால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அந்த வகையில் 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை மட்டுமே எடுத்து பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவின் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 3ஆவது ஆட்டம் தொடங்கியது. அதில், உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி உடன் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி மோதுகிறது. குஜராத் ஜெயன்ட்ஸ் நேற்று மும்பை அணி உடன் படுதோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.