ETV Bharat / sports

இங்கிலாந்து அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா? - England squad for ICC Cricket World Cup 2023

Will England conquer the world cup again? நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 5:22 PM IST

சென்னை: ஐசிசி உலகக் கோப்பையின் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்தை முதலில் எதிர்கொள்கிறது. ஆனால், 2015 வரையிலான விளையாட்டு வரலாற்றில், இங்கிலாந்து அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில்லை. அதேநேரம், 2010-இல் டி20 உலகக் கோப்பையை தட்டியது. ஆனால், தங்களது சாம்பியன் பட்டத்தை நிலைநிறுத்த இங்கிலாந்து அணி இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது என்றே கூற வேண்டும்.

2019 ஒருநாள் உலகக் கோப்பையின் மூலம் வெள்ளைப் பந்து தொடரில் இங்கிலாந்து தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது. மேலும், சர்வதேச அளவிலான பல மைதானங்களில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் தரம், எதிர் அணிகளை சற்று நடுங்க வைக்கிறது. இந்த நிலையில், ஜோஸ் பட்லர் தலைமையிலான உலகக் கோப்பை 2023-இன் இங்கிலாந்து அணியின் தனித்துவத்தை சில கோணங்களில் உற்று நோக்கலாம்.

இங்கிலாந்து அணியின் வலிமை என்ன? மொயின் அலி, ஜானி பைர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்டர்களை சமீபத்திய காலங்களில் இங்கிலாந்து அணி, தனது பக்க பலமாகக் கொண்டுள்ளது. அதேநேரம், ஜானி பைர்ஸ்டோவ் முதலில் களமிறங்கி ஒரு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அது மட்டுமல்லாமல், ஜோ ரூட் - ஹாரி புரூக் ஆகியோர் ரன்களை குவிப்பதில் முக்கிய பங்கு வகிப்பர்.

மேலும், டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்ஸ்க்கு அடுத்ததாக, டீப் டவுனில் களமிறக்குவதற்காக ஆல்-ரவுண்டர் வீரர்களையும் இங்கிலாந்து அணி வைத்துள்ளது. அதேநேரம், பகுதிநேர ஸ்பின்னரான லியாம் லிவிங்ஸ்டன், பந்தை இரண்டு வழிகளிலும் எதிர்கொள்ளக் கூடியவராகத் திகழ்கிறார்.

இதுதான் இங்கிலாந்து அணியின் பலவீனமா? அதிக ஆக்ரோஷம் கொண்ட ஆட்டத்தால், தங்களது அதிக ரன் ரேட்டைத் தொடர இங்கிலாந்து வீரர்கள் முற்படும்போது, தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க நேரிடலாம். இந்திய மைதானங்கள் சமமாம இருக்கும் என்றாலும், போட்டிகள் நடைபெறும்போது அவை மெதுவாக இருக்கலாம். இந்த நிலையில், பந்தை காற்றின் வழியாக உயர்த்துவது மோசமான பின்விளைவுகளை இங்கிலாந்து அணிக்கு கொடுக்க விரும்பும்.

மேலும், சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது உலகக் கோப்பையில் ஒரு தனித்திறமையாகும். ஆனால், இந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற பிரிவில், இங்கிலாந்து இன்னும் சோதிக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்திய மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கையாள்வது, இங்கிலாந்து அணிக்கு ஒரு திட்டமிடலாக இருக்காது. அடில் ரஷித், மொயின் அலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சுழற்பந்துகளை கையாள உள்ளனர். ஆனால், ரஷித் மட்டுமே சிறப்பு வாய்ந்த ஸ்பின்னர். எனவே, மேலும் ஒரு சிறப்பு சுழற்பந்து வீச்சாளர் இல்லாததால் போட்டிக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமையலாம்.

இங்கிலாந்து அணி வீரர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி புரூக், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி 62.15 என்ற சராசரி மதிப்பில் இருந்தாலும், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், அவரது சராசரி மதிப்பு 20.50 ஆகவே உள்ளது. ஆனால், தனது திறமையை நிரூபிப்பதற்கு ஹாரிக்கு உலகக் கோப்பை ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்கிலாந்து அணி இதற்காகத்தான் பயப்படுகிறதா? 66 ஒருநாள் போட்டிகளில் இதுவரை 26 போட்டிகளில் மட்டுமே இங்கிலாந்து அணி வென்றுள்ளது. ஏனென்றால், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துகளை எதிர்கொள்வதில் இருக்கும் சிரமங்களே அவர்களது இந்த குறிப்பிட்ட பின்தங்கிய நிலைக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதேநேரம், சுழற்பந்துகளை எதிர்கொள்வதில் அணியின் அடில் ரஷீத் மீது வைத்துள்ள நம்பிக்கை, அணியில் செயல்திறனைப் பாதிக்கலாம்.

இதையும் படிங்க: உலகக் கோப்பையை வெல்வதற்கு ரோகித் கேப்டன்சி எப்படி? - ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.