ETV Bharat / sports

World Cup Cricket 2023: பெங்களூரு ஸ்டேடியத்தில இவ்வளவு சிறப்புகளா! நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 11:34 AM IST

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒன்றான பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் சிறப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு!

Bengaluru
Bengaluru

பெங்களூரு : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வருடங்கள், மாதங்களாக குறைந்து, மாதங்கள், நாட்களாக கரைந்து, உலக கோப்பை தொடரை காண நாட்கள் மணி நேரங்களாக நிலை பெற்று உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரங்களே உள்ளதால் கிரிக்கெட் ஆர்வலர்கள் அலாதி பிரியத்துடன் காத்திருக்கின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது.

மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் விளையாடுகின்றன. முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியல் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

அப்படி 10 நகரங்களில் உள்ள மைதானங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் லீக், தகுதி சுற்று உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறுகின்றன. உலக கோப்பை தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டும் 5 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. வரும் அக்டோபர் 20ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் களம் காணுகின்றன.

தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - இலங்கை அணிகளும், அதைத் தொடர்ந்து நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகின்றன. நவம்பர் 9ஆம் தேதி நியூசிலாந்து - இலங்கை ஆட்டமும் இறுதியாக நவம்பர் 12ஆம் தேதி இந்தியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான லீக் ஆட்டம் என மொத்தம் 5 லீக் போட்டிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்டது. அதேநேரம் இந்திய மைதானங்களில் இல்லாத தனிச் சிறப்பு பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு உள்ளது என்றால் ரசிகர்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாக் கூடும். சின்னசாமி மைதானத்தில் "சப் - ஏர்" தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு உள்ளது.

இது மைதானங்களில் தேங்கும் நீரை மற்ற தொழில்நுட்பத்தை காட்டிலும் 36 மடங்கு விரைவாக வெளியேற்றும் நவீன திறன் கொண்டது. இந்த தொழில்நுட்பம் மூலம் மைதானங்களில் தேங்கும் நீரை நிமிடங்களில் வெளியேற்ற முடியும் என நம்பப்படுகிறது. மேலும், இந்த மைதானத்தில் சோலர் வசதி, இயற்கை முறையில் மின் உற்பத்தி செய்து அதை கேலரி உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள மின் விளக்குகளுக்கு பயன்படுத்திக் கொள்வது, மழை நீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மைதானங்கள் முடிவு செய்யப்பட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் குழு பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு விரைந்து பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. அதன்படி மைதானத்தின் மேற்கூரை, இருக்கைகள், உணவறைகள், ஊடக அறை, கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீரர்கள் ஓய்வறை : ஐசிசி குழு வழங்கிய பரிந்துரையின் கீழ் சின்னசாமி மைதானத்தில் உள்ள வீரர்கள் ஓய்வறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓய்வறையில் உள்ள கழிவறை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் வீரர்களின் வசதிக்கேற்ப முற்றிலும் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக மைதான நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பார்வையாளர்கள் பகுதி : மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதி நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. P2, P, P-Terrace மற்றும் Diamond என 4 வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் உணவக வசதிகளுடன் பார்வையாளர்கள் கேலரிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதில் Diamond பாக்ஸ் மட்டும் வீரர்களின் ஓய்வறைக்கு அடுத்தபடியாக இருக்கும் என்றும் அதில் சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீரர்களின் பயிற்சி : சின்னசாமி மைதானத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள 5 பிட்ச்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இது தவிர பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மைதானமும் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆடுகளம் (Pitch) எப்படி : ஐசிசி குழுவால் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மூன்று பிட்ச்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் சிவப்பு களிமண் பிட்ச் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர நான்காவதாக ஒரு ஆடுகளம் முன்னெச்சரிக்கையாக தயார்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

நுழைவு வாயில்கள் : பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் ஒட்டுமொத்தமாக 21 நுழைவு வாயிகள் உள்ளன. இதில் கப்பான் பூங்காவிற்கு எதிர்புறமாக உள்ள முக்கிய நுழைவு வாயிலில் விஐபிக்கள், வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற அனைத்து நுழைவு வாயில்களில் ஆட்டம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் : மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவசரகால சேவைகள் வழங்கக் கூடிய ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் மைதானத்தில் அருகில் ஆட்டங்கள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் தயார் நிலையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மட்டும் பார்வையாளர்களின் வசதிக்காக அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்படும் என கர்நாடக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : Asian Games Cricket : இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி! நேபாளத்தை ஊதித் தள்ளியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.