ETV Bharat / sports

Women's T20 World Cup: இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்

இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

author img

By

Published : Feb 15, 2023, 6:53 PM IST

இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்

கேப்டவுன்: மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்க தேச அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் கேப்டவுனில் தொடங்கியது.

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களிடம் சிறந்த பேட்டிங் வரிசை இருக்கிறது. முந்தைய ஆட்டம் மோசமாக இருக்கவில்லை. இந்தியா எங்களுக்கு வலுவான எதிர் அணியாக இருக்கும். இன்றைய போட்டியில் வெல்ல விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய திட்டமிட்டிருந்தோம். முந்தைய ஆட்டத்தில் எங்களுக்கு சேசிங் அமைந்ததே இதற்கு காரணம். இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் கவனம் செலுத்துவோம். அதேபோல ஸ்மிருதியும் தேவிகாவும் பேட்டிங்கிற்கு பக்க பலமாக இருப்பர் எனத் தெரிவித்தார். இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு.

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ்(கீப்பர்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், தேவிகா வைத்யா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்.

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி: ஹெய்லி மேத்யூஸ் (கேப்டன்), ஸ்டாஃபனி டெய்லர், ஷெமைன் கேம்பெல், ஷபிகா கஜ்னபி, சினெல்லே ஹென்றி, செடியன் நேஷன், அஃபி பிளெட்சர், ஷாமிலியா கானல், ரஷாதா வில்லியம்ஸ் (கீப்பர்), கரிஷ்மா ராம்ஹராக், ஷகேரா செல்மன்.

இதையும் படிங்க: WPL 2023: அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீராங்கனைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.