பாங்காக்: தாய்லாந்து நாட்டிற்கு மூன்று மாத ஓய்வுக்காகச் சென்ற ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே மாரடைப்புக் காரணமாக நேற்று(மார்ச்.7) உயிரிழந்தார். அவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தாய்லாந்து போலீஸ் ஷேன் வார்னே அறையிலுள்ள தலையணையிலும், துண்டுகளிலும் ரத்தக்கறை இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாய்லாந்து போலீஸ் கூறுகையில், "வார்னே அறையை சோதனையிட்ட போது, தரையிலும், குளியலறை துண்டுகளிலும், தலையணைகளிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டன.
இதுகுறித்து அவரது நண்பர்கள், வார்னே மூச்சு விட சிரமப்பட்டபோது 2 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளித்தோம் அப்போது இருமல், இரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல அவரது உடம்பில் காயங்கள் கிடையாது. வாயிலிருந்து ரத்தம் வந்ததற்கான அறிகுறிகள் இருந்தன என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்