டெல்லி: இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்கும் சுழலில், கடந்த மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதை கடந்தவர்களும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் சர்மா ஆகியோர் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
தற்போது மும்பையில் வசித்து வரும் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இஷாந்த் சர்மாவும், அவரது மனைவி பிரதிமாவும் தடுப்பூசி மையத்தின் முன் தங்கள் செல்ஃபியை பதிவேற்றி, "கரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள தொழிலாளர்களுக்கும், தடுப்பூசியை பெறுவதற்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தடுப்பூசியை செலுத்தவதற்கான வசதிகளும், நிர்வாகமும் சீரான முறையில் இயங்குவதைக் காண மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் விரைவில் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்" என இஷாந்த் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
#VaccinationDone✅
— Ishant Sharma (@ImIshant) May 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thankful for this and grateful for all the essential workers. Happy to see the smooth running of the facility & management.
Let’s all get vaccinated at the earliest. #GetVaccinated #CovidVaccine pic.twitter.com/3wRHeBwvTP
">#VaccinationDone✅
— Ishant Sharma (@ImIshant) May 10, 2021
Thankful for this and grateful for all the essential workers. Happy to see the smooth running of the facility & management.
Let’s all get vaccinated at the earliest. #GetVaccinated #CovidVaccine pic.twitter.com/3wRHeBwvTP#VaccinationDone✅
— Ishant Sharma (@ImIshant) May 10, 2021
Thankful for this and grateful for all the essential workers. Happy to see the smooth running of the facility & management.
Let’s all get vaccinated at the earliest. #GetVaccinated #CovidVaccine pic.twitter.com/3wRHeBwvTP
இந்தியாவின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆகியோர் ஏற்கனவே தங்களது முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உள்பட இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆறு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி, வரும் ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளது.