மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த வகையில், முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் நாளை (டிசம்பர் 4) நடக்கிறது. 2ஆவது போட்டி அதே மைதானத்தில் டிசம்பர் 7ஆம் தேதி நடக்கிறது. 3ஆவது போட்டி டிசம்பர் 10ஆம் தேதி சட்டோகிராம் மைதானத்தில் நடக்கிறது.
அதன்பின் முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதியும், 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டிகளில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமி வங்க தேச தொடரில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. அதோடு அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வர்ணனைக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்