ETV Bharat / sports

TNPL 2022: திண்டுக்கல்லின் அசால்ட் சேஸிங் - அடங்கியது கோவை! - டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்

டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்கு எதிரான போட்டியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LKK vs DD Result
LKK vs DD Result
author img

By

Published : Jun 27, 2022, 8:28 AM IST

Updated : Jun 27, 2022, 8:36 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடரின் ஆறாவது சீசன் திருநெல்வேலி சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 23ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தொடரின் 5ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேற்று (ஜூன் 26) மோதின. போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணி 189 ரன்களை திண்டுக்கல் அணிக்கு இலக்காக நிர்ணயித்த நிலையில், 19.2 ஓவர்களிலேயே இலக்கை கடந்து திண்டுக்கல் அணி வெற்றிபெற்றது. பெரிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - விஷால் வைத்யா ஜோடி அபாரமான தொடக்கத்தை அளித்தது.

இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஹரி நிஷாந்த் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர் உள்பட 60 (36) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டர் வீரர்கள் ஆர். விவேக், ஏஜி பிரதீப், கரப்பரம்பில் மோனிஷ் ஆகியோரும் வெற்றிக்கு பக்கப்பலமாக இருந்தனர். கோவை அணி பந்துவீச்சில் கேப்டன் ஷாருக் கான், ஆர். திவாகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.

முன்னதாக கோவை அணி தரப்பில் அதிகபட்சமாக முகிலேஷ் 49 (25), சுரேஷ் குமார் 37 (24) ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் பந்துவீச்சில் விவேக் 3, ரங்கராஜ் சுதேஷ், எம். சிலம்பரசன் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஹரி நிஷாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை முதலிடம்: புள்ளிகள் பட்டியலில், திண்டுக்கல் அணி, 2 புள்ளிகளுடன் (1 வெற்றி, 1 தோல்வி) 4ஆவது இடத்திலும், கோவை அணி புள்ளிகள் ஏதுமின்றி (1 தோல்வி) 7ஆவது இடத்திலும் உள்ளன. மேலும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் (2 வெற்றி) முதல் இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டி: டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, திருநெல்வேலி சங்கர் நகர் இந்தியா சிமெண்டஸ் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும்.

இதையும் படிங்க: IRE vs IND: 12 ஓவர் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா!

Last Updated : Jun 27, 2022, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.