ETV Bharat / sports

IND vs WI: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்குகிறது - west indies

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (ஆகஸ்ட் 03) தொடங்குகிறது.

india vs west indies T20
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20
author img

By

Published : Aug 3, 2023, 3:16 PM IST

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கிலும், அதன் பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது. இதில் மூன்று போட்டி வெஸ்ட் இண்டீஸிலும், கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது.

முதல் டி-20 போட்டி இன்று (ஆகஸ்ட் 03) டிரினிடாட், தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாத பட்சத்தில், ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். இளம் வீரர்கள் இந்த போட்டியில் களம் காண்கின்றனர். முகேஷ் குமார், ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களுக்கு தனது திறமைகளை வெளிப்படுத்த ஓர் அற்புதமான வாய்ப்பாகும்.

தொடக்க வீரராக களம் இறங்கி மூன்று ஒருநாள் போட்டிகளிலுமே அரை சதம் அடித்த இஷான் கிஷன் மற்றும் அவருடன் இணைந்து அசத்திய ஷுப்மன் கில் இருவரும் அதே முனைப்புடன் தொடங்க உள்ளனர். மேலும், இப்போட்டியில் இடது கை பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரை இந்த டி20 தொடருக்கு ரோவ்மேன் பவல் தலைமை தாங்குகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் 55 பந்துகளில் 137 ரன்கள் அடித்து மிரட்டிய நிகோலஸ் பூரான் இந்தத் தொடரில் இணைந்துள்ளார். மேலும், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் என அதிரடி பட்டாளமே உள்ளது.

இவர்களுக்கு சாதகமான சூழல் உருவானால் எதிர் அணியின் பந்து வீச்சை ஒரு கை பார்த்து விடுவார்கள். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு எந்த வகையிலும் குறை இருக்காது. மேலும், குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்தியா அணிக்கு சற்று சவாலாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 25 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 17 முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

கணிக்கப்பட்ட அணி விவரம்:

இந்தியா: ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (வி.கீ) , ஷுப்மன் கில், திலக் வர்மா அல்லது சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ( கேப்டன்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் அல்லது அவேஷ் கான்

வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரான் (வி.கீ), ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ், அகேல் ஹொசைன், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட்

ஆட்ட நேரம்: இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

நேரலை: டிடி ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா

இதையும் படிங்க: 2023 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்-14க்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.