ஹைதராபாத்: ஐபிஎல் 2022 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி முடிகிறது. 4 பிளேஆஃப் உள்பட மொத்தம் 70 லீக் போட்டிகள் 65 நாள்களில் நடைபெறுகிறது. இதற்காக வழக்கம்போல் 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏவில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும், குரூப் பியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தாண்டு மகாராஷ்டிராவில் உள்ள மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடக்கின்றன. முதல் ஆட்டம் மார்ச் 26ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் தொடங்குகிறது. அதேபோல இறுதி ஆட்டம் மே 22ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் முடிகிறது. இந்த இரண்டு ஆட்டங்களுமே மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கின்றன.
மொத்தமாக மும்பையின் வான்கடே, டிஒய் பட்டில் மைதானங்களில் தலா 20 ஆட்டங்களும், மும்பையின் பிராபோர்ன், புனேவின் எம்சிஏ மைதானங்களில் தலா 15 ஆட்டங்களும் நடக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் போட்டிகள் 3:30 மணிக்கும் மாலை நேர போட்டிகள் இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
முழு அட்டவணை பின்வருமாறு:




மும்பை, புனேவில் மட்டுமே 70 லீக் ஆட்டங்களும் நடப்பதால், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற முக்கிய அணிகளின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஐபிஎல் 2021 14ஆவது சீசனும் அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: மும்பை, புனேவில் மட்டுமே லீக் ஆட்டங்கள்