ETV Bharat / sports

TNPL 2021: திருநெல்வேலிக்கு அல்வா கொடுத்த திருச்சி..! - டிஎன்பிஎல்

நெல்லை - திருச்சி அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

nellai
nellai
author img

By

Published : Jul 22, 2021, 1:28 AM IST

Updated : Jul 22, 2021, 9:09 AM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மூன்றாவது லீக் போட்டியில் ராயல் நெல்லை கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் நேற்று (ஜூலை 21) மோதின.

இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் நெல்லை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

அமித் அரைசதம்

திருச்சிஅணியில் அதிகபட்சமாக அமித் சாத்விக் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 71 (52) ரன்கள் அடித்தார். நெல்லை அணியில் ஷருண் குமார் 2 விக்கெட்டுகளையும், அதிசயராஜ், அஜித் குமார், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

சென்னையில் விக்கெட் மழை

அதன்பின் களமிறங்கிய நெல்லை அணி முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டை இழக்க ஆரம்பித்தது. சென்னையில் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெல்லை அணியின் விக்கெட்தான் சேப்பாக்கத்தில் மழையாக பொழிந்தது.

தொடர்ச்சியாக நிரஜ்சன் 4, சூர்யபிரகாஷ் 4, கேப்டன் பாபா அபராஜித் 2, பிரதோஷ் 0, மோகன் அபினவ் 0 என முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை இழந்தனர். பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ் சற்றுநேரம் தாக்குப்பிடித்தனர்.

ஆனால் யாதவ் 28 (22), அர்ஜூன் மூர்த்தி 0 (1) என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இந்திரஜித் விக்கெட் எடுத்தால் விரைவில் வெற்றி என்ற நிலையில், 14ஆவது ஓவரை மதிவண்ணன் வீசினார்.

சோலி முடிந்தது...

அந்த ஓவரின் முதல் பந்திலேயே இந்திரஜித் 32 (31) ரன்களில் ஆட்டமிழக்க, மூன்றாவது, நான்காவது பந்துகளில் முறையே அஜித் குமாரும், அதிசய ராஜூம் டக்- அவுட்டாக, நெல்லை அணி 13.4 ஓவர்களிலேயே 77 ரன்களில் ஆல்-அவுட்டானது.

இதன்மூலம், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி அணியில் மதிவண்ணன் 3 விக்கெட்டுகளையும், சுனில் சாம், சரவணன் குமார் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டி

திண்டுக்கல் டிராகன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதும் நான்காவது லீக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூலை 22) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Last Updated : Jul 22, 2021, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.