ETV Bharat / sports

TNPL 2021 FINALS: சேப்பாக் கில்லீஸ் vs திருச்சி வாரியர்ஸ் மோதல் - டிஎன்பிஎல்

டிஎன்பில் தொடரின் சென்னை, திருச்சி அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (ஆக. 15) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரூபி, திருச்சி வாரியர்ஸ்
TNPL 2021 FINALS RTW vs CSG
author img

By

Published : Aug 15, 2021, 6:06 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 28 லீக் போட்டிகளில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளோ-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

முதல் குவாலிஃபயரில், திருச்சி அணி சென்னையை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. எலிமினேட்டரில் திண்டுக்கல் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது குவாலிஃபயரில் சென்னை அணி திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மூன்றாவது கோப்பையை நோக்கி சென்னை

2017, 2019 என இரண்டு முறை சாம்பியனான சென்னை அணி, இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் கௌசிக் காந்தி, ஜெகதீசன், ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். பந்துவீச்சில் சாய் கிஷாரும் மிரட்டி வருகிறார்.

திமிறும் திருச்சி...

திருச்சி அணி இந்த தொடர் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது. டேபிள் டாப்பராக இருந்து, முதல் குவாலிஃபயரிலேயே வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. திருச்சி அணியில் பெரும் இளைஞர் பட்டாளமே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்துள்ளது.

மதிவண்ணன், சரவணன் குமார் என பலமான பந்துவீச்சாளர்களை திருச்சி அணியில் இருந்தாலும், பேட்டிங் வரிசையும் திடமாகவே உள்ளது. இந்த தொடரில், இரு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ள நிலையில் இரண்டிலும் திருச்சி அணியே வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் யாருக்கு?

இன்றைய போட்டியிலும் அதே ஆதிக்கத்தை திருச்சி தொடர்ந்தால், சென்னை அணியை வீழ்த்தி முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் டாஸ் பெரிய பங்காற்றும் என்பது குறிப்பிடதக்கது.

இரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

உத்தேச பிளேயிங் XI

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ்,நிதீஷ் ராஜகோபால், சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), மதிவண்ணன், பொய்யாமொழி, சுனில் சாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), நாராயணன் ஜெகதீசன், சோனு யாதவ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரீஷ் குமார், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷார், மணிமாறன் சித்தார்த், அருண், எஸ்.ராதாகிருஷ்ணன், அலெக்ஸாண்டர்.

இதையும் படிங்க: துக்க நாள்: தோனி ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.