கொழும்பு (இலங்கை): இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
டி20 போட்டியில் அறிமுகமாகும் பிருத்வி ஷா, கேப்டன் தவான் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். முதல் பந்திலயே பிருத்வி ஷா, சமீரா பந்துவீச்சில் மினோத் பானுகாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின் களம் புகுந்த சாம்சன் சற்றுநேரம் தாக்குப்பிடித்து 27(20) ரன்களை சேர்த்தார்.
பொறுமையோ பொறுமை
அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார், தவானுடன் சேர்ந்து விக்கெட்டை இழக்காமல் பொறுப்புடன் விளையாடினார். இந்நிலையில், கேப்டன் தவான் 46(36) ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து சூர்யகுமாரும் 50(34) ரன்களில் பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.
இஷான், ஹர்திக் இணை வாணவேடிக்கை காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் 10(12) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. இஷான் கிஷன் 20(14), குர்னால் பாண்டியா 3(3) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் ஹசரங்கா, சமீரா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்களை எடுத்து, தொடர்ந்து விளையாடிவருகிறது.
இதையும் படிங்க: கோளாறால் கைவிட்டுப்போன பதக்கம்; மனு பாக்கரின் சோக கதை