ETV Bharat / sports

IND vs SL: ஒன்றரை ஆண்டு பசியை தீர்க்குமா இலங்கை; தேறுமா இந்திய அணி - IND vs SL

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியை எதிர்நோக்கி இரு அணிகளும் காத்திருக்கின்றன.

IND vs SL 3rd T20I MATCH PREVIEW
IND vs SL 3rd T20I MATCH PREVIEW
author img

By

Published : Jul 29, 2021, 4:02 PM IST

கொழும்பு (இலங்கை): இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் இன்றோடு (ஜூலை 29) முடிவுக்கு வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா 2-1 கணக்கில் வென்ற நிலையில், டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இலங்கையும் வென்றுள்ளன.

நீண்ட காலமாக வெற்றியையே கண்டிராத இலங்கை அணியை எளிதாக வீழ்த்திடலாம் என்று எண்ணியது டிராவிட் & கோ. இலங்கையும் அதற்கு ஏற்றாற்போல் விளையாடியது என்றாலும், இந்தியாவுக்கு பேரடியாக விழுந்தது, கரோனாதான்.

யார் கத்துக்குட்டி

இங்கிலாந்தில் கில், சுந்தர், ஆவேஷ் கான் அனைவரும் காயத்தில் கிளம்ப, இலங்கையில் இருக்கும் சூர்யகுமாரையும், பிருத்வியையும் அங்கு அழைத்துள்ளது விராட் & கோ. இந்த சூழலில், நேற்று முன்தினம் (ஜூலை 27) குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதிச்செய்யப்பட அடுத்தடுத்து இந்திய அணியில் பலரும் சுய தனிமைப்படுத்துதலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், நேற்றைய போட்டியில் தவான், படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், சாம்ஸன், ராணா என 5 பவுலர்களையும், 6 பவுலர்களையும் வைத்து இந்திய களமிறங்கியது. இதே கதைதான் இன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட பசி

இலங்கை அணியில் தொடக்க வீரர்களான அவிஷ்கா, பானுகா தொடர்ந்து நல்ல ஃபார்மில் ஆடி வருவது அந்த அணிக்கு பெரிய ஆறுதல். மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ள நிலையில், நேற்று தனஞ்ஜெயாவின் பொறுப்பான ஆட்டம்தான் இலங்கையை கரை சேர்த்தது. பந்துவீச்சில் ஹசரங்கா, சமீரா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

இலங்கை அணி கடந்த 2019 அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்தான், அந்த அணி கடைசியாக வென்ற டி20 தொடர். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு பசியை தீர்க்க இலங்கை அணி வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாம் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று (ஜூலை 29) இரவு 8.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்க இருக்கிறது.

இதையும் படிங்க: Tokyo Olympics : கொரிய வீரரை வீழ்த்திய அதானு தாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.