ETV Bharat / sports

IND vs SL: இந்தியா மந்தமான ஆட்டம்; தவான் ஆறுதல் - IND vs SL

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 132 ரன்களை எடுத்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தவான்
தவான்
author img

By

Published : Jul 28, 2021, 10:13 PM IST

கொழும்பு: இலங்கை, இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கேப்டன் தவானும், ருதுராஜ் கெய்க்வாடும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை இந்த இணை எடுத்தது. ருதுராஜ் 21 (18) ரன்களில் கேப்டன் ஷனாகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, தவான் 40 (42), தேவ்தத் படிக்கல் 29 (23), சாம்சன் 7 (9) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இறுதி நேரத்தில், நிதிஷ் ராணாவும் சொதப்ப இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களையே எடுத்தது. இலங்கை தரப்பில் தனஞ்செயா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணி 133 ரன்கள் எடுத்தால் தொடரில் சமநிலை பெறலாம் என்ற நிலையில், ஐந்து ஓவர்களில் 29/1 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: சச்சினால் மருத்துவராகும் விவசாயியின் மகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.