ETV Bharat / sports

பிபிஎல் 10: சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிராத்வெய்ட் - பிக் பாஷ் 2020-21

பிக் பாஷ் தொடரின் 10ஆவது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், சிட்னி சிக்சர்ஸ் அணி கார்லஸ் பிராத்வெய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

bbl-carlos-brathwaite-signs-up-with-sydney-sixers

author img

By

Published : Nov 15, 2020, 4:25 PM IST

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் தொடரின் 10ஆவது சீசன் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், நடப்பு சாம்பியனான சிட்னி சிக்சர்ஸ் அணி கார்லஸ் பிராத்வெய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இவரையும் சேர்த்து சிட்னி சிக்சர்ஸ் அணி டாம் கரன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகிய மூன்று சர்வதேச வீரர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதில், இவர் பிபிஎஸ் தொடரின் 7ஆவது சீசனிலேயே மாற்று வீரராக சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு ஆடியுள்ளார்.

இதைப்பற்றி பிராத்வெய்ட் கூறுகையில், ''சிட்னியுடன் எனக்கு நிறைய ஞாபகங்கள் உள்ளது. மிகவும் பிடித்த நகரம் சிட்னி தான். ஏனென்றால் எஸ்சிஜி மைதானத்தில் தான் எனது இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆடினேன். சிட்னி சிக்சர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளேன். நியூ சவுத் வேல்ஸ் நகரத்தில் கிரிக்கெட்டிற்கு இருக்கும் வரலாற்றுப் பின்புலம் எப்போதும் ஸ்பெஷலானது'' என்றார்.

கார்லஸ் பிராத்வெய்ட் உடன் ஒப்பந்தம் செய்து தொடர்பாக சிட்னி சிக்சர்ஸ் நிர்வாகம் கூறுகையில், ''கார்லஸுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியானது. ஏனென்றால் 7ஆவது சீசனின்போது அவர் மாற்று வீரராக அணிக்குள் வந்து நான்கு போட்டிகளை வென்றுகொடுத்தார். அவர் அணியில் இணைந்தது, அணிக்கு நல்ல சமநிலையைக் கொடுத்தது. அவரது அனுபவம் எங்கள் அணிக்கு சேஸிங் போது உதவும்'' என்றனர்.

இதையும் படிங்க: கோலியை ரசிக்கவும் செய்கிறார்கள்... வெறுக்கவும் செய்கிறார்கள்: டிம் பெய்ன்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.