சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.
உலக கோப்பைக்கு முன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரை விளையாடியது. இந்த தொடரில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 201 ரன்களை எடுத்திருந்தார். இதனால், இவர் 861 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இவரை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் தற்போது 808 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் கே.எல். ராகுல், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 13, 15 மற்றும் 16 ஆவது இடத்திற்கு முன்னேறினர்.
பவுலர்களுக்கான தரவரிசையில் டாப் 10 இல் ஒரு இந்தியர் கூட இல்லை. இந்நிலையில், புவனேஸ்வர் (638), அஸ்வின் (586) மற்றும் ஹர்ஷல் படேல் (585) புள்ளிகளுடன் 12, 22 மற்றும் 23 ஆவது இடத்தில் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், 173 புள்ளிகளுடன் ஹர்திக் பாண்டியா 6 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாட்டில் உள்ள ஆடுகளங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன் - பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி