ETV Bharat / sports

India Vs New Zealand: மீண்டும் திரும்புகிறதா 2019 உலக கோப்பை? இந்தியா - நியூசிலாந்து வெற்றி வாய்ப்பு எப்படி? - உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup Cricket 2023 : 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் கண்ட தோல்விக்கு நடப்பு சீசனில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ETV Bharat
ETV Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 6:00 PM IST

ஐதராபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது.

அதேபோல், நியூசிலாந்து அணி விளையாடிய 9 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வரும் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பமாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரைஇறுதி ஆட்டம் மீண்டும் உருவானது போல் உணரும் வகையில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து மோதும் அரைஇறுதி போட்டி காணப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்து மான்செஸ்டரில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 239 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரிலும் லீக் சுற்றில் 7 வெற்றி, 1 தோல்வி கண்டு இந்திய அணி முதல் இடத்தில் இருந்தது.

அதேபோல் நியூசிலாந்து அணி 5 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. நடப்பு சீசனை போன்று 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்து உள்ள இந்திய அணி அதில் 4 முறை வெற்றியும், 5 முறை தோல்வியும் கண்டு உள்ளது. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் நடந்த லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை இரண்டு முறை இந்திய அணி எதிர்கொள்வது என்பது இரண்டவது முறையாகும் இதற்கு முன் 1987 மற்றும் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை இரண்டு முறை இந்திய அணி எதிர்கொண்டது. அதில் 1987ஆம் ஆண்டு எதிர்கொண்ட 2 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது, 2019ஆம் அண்டு அதற்கு எதிர்மாறாக அமைந்தது.

கடைசியாக 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையை தவிர்த்து 1975, 1979, 1992, 1999 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக லீக் சுற்றில் வெற்றியை பதிவு செய்தது.

போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் இந்திய அணி 21 ஆட்டங்களில் விளையாடி அதில் 12ல் வெற்றியை பதிவு செய்து உள்ளது. நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி கண்டு உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 117 ஆட்டங்கள் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 59 ஆட்டங்களில் இந்திய அணியும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று உள்ளது.

ஒரு ஆட்டம் சமனிலும், 7 ஆட்டங்கள் முடிவு கிடைக்காமலும் போனது. நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றி வேட்கை தொடருமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : "1970களில் இருந்த வெஸ்ட் இண்டீசை காட்டிலும் இந்திய அணி வலிமை" - முன்னாள் வீரர் சுனில் வால்சன் பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.