ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இலங்கை அணி தடுமாறி வருகிறது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் குவித்து உள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் :
இலங்கை : பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க.
பாகிஸ்தான் : அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
இதையும் படிங்க : சுப்மான் கில் டிஸ்சார்ஜ்! இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் விளையாடுவாரா?