கெபெர்ஹா : இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில் அதில் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 19) கெபெர்ஹா மைதானத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. முதல் ஆட்டத்தில் போன்று தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த ஆட்டத்திலும் அணிக்கு உறுதுணையாக இருந்து ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ரிங்கு சிங் இன்றைய ஆட்டத்தின் மூலம் அறிமுகமாகிறார். டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த அவர், இன்றைய ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் அறிமுகமாக உள்ளார். முன்னதாக இந்திய அணிக்கான தொப்பியை கேப்டன் அவரிடம் வழங்கினார்.
-
After a smashing start to his T20I career, it is now time for Rinku Singh to make his mark in the ODI format.
— BCCI (@BCCI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
He gets his India ODI 🧢 from @imkuldeep18🙌🏽#TeamIndia #SAvIND https://t.co/p5r3iTcPrj pic.twitter.com/Stx6TtbLej
">After a smashing start to his T20I career, it is now time for Rinku Singh to make his mark in the ODI format.
— BCCI (@BCCI) December 19, 2023
He gets his India ODI 🧢 from @imkuldeep18🙌🏽#TeamIndia #SAvIND https://t.co/p5r3iTcPrj pic.twitter.com/Stx6TtbLejAfter a smashing start to his T20I career, it is now time for Rinku Singh to make his mark in the ODI format.
— BCCI (@BCCI) December 19, 2023
He gets his India ODI 🧢 from @imkuldeep18🙌🏽#TeamIndia #SAvIND https://t.co/p5r3iTcPrj pic.twitter.com/Stx6TtbLej
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்கிற கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது அதேநேரம் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் இந்திய வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் மோதிக் கொள்வார்கள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வருமாறு :
இந்தியா : கே.எல்.ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
-
2ND ODI. India XI: K. Rahul (WK/C), R. Gaikwad, S. Sudharsan, T. Varma, S. Samson, R. Singh, A. Patel, A. Singh, A. Khan, K. Yadav, M. Kumarhttps://t.co/p5r3iTdngR #SAvIND
— BCCI (@BCCI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2ND ODI. India XI: K. Rahul (WK/C), R. Gaikwad, S. Sudharsan, T. Varma, S. Samson, R. Singh, A. Patel, A. Singh, A. Khan, K. Yadav, M. Kumarhttps://t.co/p5r3iTdngR #SAvIND
— BCCI (@BCCI) December 19, 20232ND ODI. India XI: K. Rahul (WK/C), R. Gaikwad, S. Sudharsan, T. Varma, S. Samson, R. Singh, A. Patel, A. Singh, A. Khan, K. Yadav, M. Kumarhttps://t.co/p5r3iTdngR #SAvIND
— BCCI (@BCCI) December 19, 2023
தென் ஆப்பிரிக்கா : டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்.
இதையும் படிங்க : IPL Auction 2024 : செலக்சனில் எப்பவுமே தல டோனி தான் பெஸ்ட்! சிஸ்கேவுக்கு அடித்த ஜாக்பாட்!