துபாய் : ஐசிசியின் 2021-ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட்டர் விருதை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார்.
இந்தத் தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. அதில், “2021-ஆம் ஆண்டின் மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், தென் ஆப்பிரிக்காவின் லிசெல் லீ மற்றும் அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோருடன் ஸ்மிருதி மந்தனாவும் இடம்பெற்றிருந்தார்.
இதில், 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காருக்கான விருதை ஸ்மிருதி மந்தனா வெல்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனா தனி ஆளாக களத்தில் நின்றாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். இவர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 2021இல் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் சிறப்பான ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே இந்தியா வென்றிருந்தது.
இதற்கு ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி ஆட்டமும் ஒரு காரணம். 25 வயதான ஸ்மிருதி மந்தனா, 62 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி-20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் பிங்க் பால் டெஸ்டில் மந்தனா சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மகளிர் டி20 சேலஞ்ச்: டிஃபெண்டிங் சாம்பியன் சூப்பர்நோவாசை சமாளிக்குமா வெலாசிட்டி!