ETV Bharat / sports

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி! - சங்கர் மகாதேவன்

music concert in India Pakistan match: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் பின்னணிப் பாடகர்கள் அரிஜித் சிங், சுக்விந்தர் சிங் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

music concert in India Pakistan match
இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது பிசிசிஐ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 11:34 AM IST

அகமதாபாத்: 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிக்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியில், பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அர்ஜித் சிங், பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங் மற்றும் தமிழ் மற்றும் பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் ஆகியோர் இசை நிகழ்ச்சியை நடத்துவர் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்று (அக் 12) அறிவித்துள்ளது.

  • 🎶 Catch Shankar Mahadevan LIVE before the big match at The Narendra Modi Stadium in Ahmedabad, setting the stage for #INDvPAK like never before! 🙌

    Experience the pre-match show at the largest cricket ground in the world on 14th October, starting at 12:30 PM!#CWC23 pic.twitter.com/WMYRx0mR08

    — BCCI (@BCCI) October 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடுவதைக் கருத்தில் கொண்டு, ரசிகர்கள் கூட்டம் பெரும் திரளென வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ தனது 'X' வலைதளப் பக்கத்தில் தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இசை நிகழ்ச்சி அக்டோபர் 14ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். இதில் பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அர்ஜித் சிங், பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங் மற்றும் தமிழ் மற்றும் பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறும்" என்று பதிவிட்டுள்ளது.

ஒரு நாள் உலகக் கோப்பைகளில் இந்தியா தனது திறமையான யுத்திகளைச் செலுத்தி ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணியை வென்றுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி எப்போதுமே அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், தற்போது நாளை (அக்.14) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ள இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழக அரசின் துணை இருந்தால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோம்.. ஆசியர் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் நம்பிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.