ETV Bharat / sports

IND vs SL 3rd ODI: வெற்றி இலக்கை நோக்கி இலங்கை நிதான ஆட்டம்

author img

By

Published : Jul 23, 2021, 9:42 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

sl
இலங்கை

இந்தியா-இலங்கை மோதும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவின் பிரேமதசா மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. போட்டியின் நடுவே மழை பெய்ததன் காரணமாக, இரு அணிகளுக்கு 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக, டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 227 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் தனஞ்செய, பிரவீன் ஜெயவிக்ரம 3 விக்கெட்டுகளும், துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கி விளையாடிவருகிறது. தொடக்க ஆட்டக்காரரான மினோத் பனுகா 7 ரன்னில் கவுதம் ஸ்பீன் அட்டாக்கில் அவுட் ஆனார்.

தற்போது, அவிஷ்கா பெர்ணான்டோ 50 ரன்களுடனும், பனுகா ராஜபக்ச 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி 17 ஓவர் முடிவில் 104 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி விளையாடிவருகிறது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: தேசியக்கொடியை ஏந்திவந்த மேரிகோம், மன்பிரீத் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.