ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்! - ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமித்துள்ளது.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்
author img

By

Published : Nov 4, 2021, 9:48 AM IST

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரோடு நிறைவடைகிறது. ஆனால் ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என ரவி சாஸ்திரி அறிவித்தார்.

இந்திய அணி தற்போது, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால், அணி கட்டமைப்பில் பெரும் மாற்றத்தையும் உத்வேகத்தையும் அளிக்கக்கூடிய ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முயற்சி எடுத்துவந்தது.

டிராவிட் நியமனம்

இந்திய அணியின் (சீனியர் ஆடவர் அணி) முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது. அவர், இம்மாதம் இந்தியாவில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து தொடரில் இருந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

ராகுல் டிராவிட், கடந்த ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இளம் வீரர்களை கொண்ட அந்த அணி ஒருநாள் தொடரை வென்றாலும், டி20 தொடரை இழந்தது. இந்த தொடர், இந்திய இளம் வீரர்களுக்கான பரிசோதனையாக இருந்தாலும், ராகுல் டிராவிட்டுக்கும் பரிசோதனை தொடராகவே அமைந்தது.

துடிப்பான டிராவிட்

இதன்பின்னரும், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்விக்கு நீண்ட நாளாக பதில் இல்லாமல் இருந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ளே பயற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

  • 🚨 NEWS 🚨: Mr Rahul Dravid appointed as Head Coach - Team India (Senior Men)

    More Details 🔽

    — BCCI (@BCCI) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இருப்பினும், தேசிய கிரிக்கெட் அகாதமியில் தலைவராக இருந்த டிராவிட், இளம் வீரர்களை கையாளுவதிலும், அணி கட்டமைப்பிலும் சிறப்பாக செயல்பட்ட அனுபவம் உள்ளவராக பார்க்கப்படுகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவகை போட்டிகளிலும் ஒரே வீரர்கள் பங்கேற்பதுதான், இந்திய அணியின் தொடர் சறுக்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலைமையை சீர்செய்ய டிராவிட் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி, இம்மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. நவம்பர் 17ஆம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற இருக்கிறது. குறிப்பாக, விராட் கோலி டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த தொடரில் இந்த அணியை டிராவிட்டுடன் சேர்ந்து வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: T20 WORLDCUP: ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.