ETV Bharat / sports

இவருக்கு இதான் வேலை! மைதானத்திற்குள் ஜார்வோ அட்ராசிட்டி! அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்! - இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5வது லீக் ஆட்டத்தில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த பிரபல பிராங்ஸ்டர் ஜார்வோவால் பரபரப்பு ஏற்பட்டது.

Jarvo
Jarvo
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 5:19 PM IST

சென்னை : இந்தியா - ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தின் இடையே பிரபல யூடியூபர் மற்றும் பிராங்ஸ்டர் ஜார்வோ பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜார்வோ, பிரபல யூடியூபர் மற்றும் பிராங்ஸ்டர். இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டங்களில் எல்லாம் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களுடன் பீல்டிங் செய்வது, அல்லது ஒரு வீரர் அவுட்டாகி மற்றொரு வீரர் களமிறங்குவதற்குள் அவருக்கு பதிலாக களமிறங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஓவ்வொரு ஆட்டத்திலும் பாதுகாப்பு விதிகளை மீறி ஜார்வோ மைதானத்திற்குள் நுழைவதால் பொது மக்கள் இடையே இவர் பிரபலமானார். அதேநேரம் இவர் எப்படி பாதுகாப்பு தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைகிறார் என்ற சந்தேகம் மைதான பணியாளர்களிடமும் உள்ளது. இந்தியா விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் எப்படியாவது பாதுகாப்பு விதிகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து விடுவார்.

அந்த வகையில் இன்றைய ஆட்டத்திலும், அவர் விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார். இந்திய வீரர்கள் பீல்டிங் செய்வதில் மும்முரமாக கவனம் செலுத்தி வந்த நிலையில் அதை பயன்படுத்திக் கொண்டு ஜார்வோ அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்து உள்ளார். இதை கண்ட இந்திய வீரர் விராட் கோலி உடனடியாக பணியாளர்ளுக்கு தெரியப்படுத்தினார்.

இதையடுத்து, மைதானத்திற்குள் நுழைந்த பணியாளர்கள் ஜார்வோவை வெளியேற கூறினார். விராட் கோலியும்ம் ஜார்வோவை வெளியேறுமாறு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். பாதுகாப்பு தடுப்புகளை மீறி ஜார்வோ மைதானத்திற்குள் நுழைந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்து கொண்டு ஜார்வோ மைதானத்திற்குள் நுழைந்தார். மேலும், தன்னை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் எனக் கூறி இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவிடம் வம்பிழுக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து அவரை அங்கிருந்து பாதுகாப்பு வீரர்கள் வெளியேற்றினர். இதனிடையே மீண்டும் மைதானத்திற்குள் நுழைய ஜார்வோ முயன்றார். அப்போதும் அவரை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இப்படி இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களில் எல்லாம் ஜார்வோ தொடர்ச்சியாக அத்துமீறி வருகிறார்.

இதையும் படிங்க : பயிற்சி விமானம் விபத்து! 2 இந்தியர்கள் பலி! கனடாவில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.