ETV Bharat / sports

பாகிஸ்தானுக்கு எதிராக 'மாஸ்' காட்டிய ஃபின்ச்! - ரிஸ்வான்

ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், கேப்டன் ஃபின்சின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சதம் விளாசிய ஃபின்ச்!
author img

By

Published : Mar 25, 2019, 3:43 PM IST

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாஅணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மாலிக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம்-உல்-ஹக் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரர் மசூத் 19 ரன்களில் வெளியேரினார்.

கடந்த போட்டியில் சதம் விளாசிய இளம் வீரர் சோஹைல் 34 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு இளம் வீரர் ரிஸ்வான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வந்த வீரர்களில் உமர் அக்மல் 16 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் மாலிக்-ரிஸ்வான் இணை பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

மாலிக் ஒருநாள் போட்டிகளில் 44ஆவது அரைசத்ததை பூர்த்திசெய்து 60 ரன்களில் வெளியேற, ரிஸ்வான் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சத்தைதை பதிவுசெய்து 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஒவர்களில் ஏழு விக்கெடுகளை இழந்து 284 ரன்கள் எடுத்தது.

பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச்-கவாஜா இணை களமிறங்கியது. இந்த இணை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எவ்வித சிரமமுமின்றி எளிதாக சமாளித்தது.

குறிப்பாக ஃபார்மின்றி தவித்து வந்த கேப்டன் ஃபின்ச் இந்தத் தொடரில் அபாரமாக ஆடிவருகிறார். இந்தப் போட்டியிலும் அந்த ஃபார்மை தொடர பாகிஸ்தான் வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர்.

தொடக்க வீரர் கவாஜா ஒருநாள் போட்டிகளில் எட்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்ய, பதிலுக்கு கேப்டன் ஃபின்ச் தனது 13ஆவது சதத்தை பூர்த்திசெய்து மாஸ் காட்டினார்.

முதல் விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்த நிலையில், கவாஜா 88 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 19 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, கேப்டன் ஃபின்ச் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக 150 ரன்களைக் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார்.

ஆஸ்திரேலிய அணி 47.5 ஒவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் 153 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social, except in India where use on social media platforms are prohibited. Available worldwide excluding sports specialist channels in India. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies (India must be blocked). Max use 2 minutes. Use within 72 hours. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Sharjah Cricket Stadium, Sharjah, United Arab Emirates. 24th March, 2019
Pakistan Innings:
1. 00:00 Imam ul Haq and Shan Masood walk in
2. 00:03 WICKET - Imam ul Haq bowled by Jhye Richardson
3. 00:11 SIX - Shoaib Malik hits a six of Nathan Lyon
4. 00:23 FIFTY - Shoaib Malik gets a fifty with a single off Nathan Lyon
5. 00:38 HUNDRED - Mohammad Rizwan gets his century with a single off Adam Zampa
6. 00:51 - FOUR - Mohammad Rizwan hits a four off Nathan Coulter-Nile
7. 01:03 - Yasir Shah and Imad Wasim walk out
Australia Innings:
8. 01:07 - Usman Khawaja shot
9. 01:10 - SIX - Aaron Finch hits a six off Yasir Shah
10. 01:19 - SIX - Aaron Finch hits a six off Yasir Shah
11. 01:29 - FIFTY - Khawaja gets his fifty with a single of Imad Wasim
12. 01:42 - HUNDRED - Aaron Finch gets his 100 with a barce off Mohammad Hasnain
13. 01:56 - Shoaib Malik and Aaron Finch handshake
SOURCE: Ten Sports
DURATION: 02:00
STORYLINE:
Aaron Finch scored a second straight one-day international century and put on an opening stand of 209 with Usman Khawaja (88) as Australia cruised to an 8-wicket victory over Pakistan in the second ODI in Sharjah, UAE on Sunday.
Finch carried his bat to a career-best 153 not out from 143 balls - with 11 fours and six sixes - and the Aussie skipper also stepped up to bowl 1-41 from a full ten overs after Jhye Richardson had dislocated a shoulder while fielding.
Batting first, Pakistan made 284 for 7, thanks largely to Mohammad Rizwan's debut ODI century (115), but it never looked enough to really test the tourists.
Fittingly, Finch struck the winning runs with 13 balls to spare and Australia now lead 2-0 in the 5-match series against an experimental Pakistan side missing several key players.
The third ODI is scheduled for Wednesday in Abu Dhabi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.