ETV Bharat / sports

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. இளம் வேகப்பந்து வீச்சாளர் விலகல்! - Cricket news tamil

Pakistan Team for ICC World Cup 2023: ஐசிசி உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிர்க்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Pakistan world cup 2023 squad announced
Pakistan world cup 2023 squad announced
author img

By ANI

Published : Sep 22, 2023, 3:48 PM IST

கராச்சி: ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பையின் 13வது எடிசன் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் விளையாடி வருகிறது. இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர பந்துவீச்சாளரான நசீம் ஷா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக 29 வயதான ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவரது பந்து வீச்சின் சராசரி 3.36 ஆக உள்ளது. இவர் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை பயிற்சி ஆட்டங்களில் மோதுகின்றது. உலகக் கோப்பையின் முதல் போட்டியாக பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை அக்டோபர் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் சந்திக்கிறது.

உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அஃப்ரிடி.

இதையும் படிங்க: Ind vs Aus: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதான தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.