மனுகா ஓவெல் : ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான், பிரதமர் லெவன் அணிகள் இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி முதலில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் பந்தை அடித்து விட்டு ஒரு ரன்னுக்காக பாபர் அசாமை அழைத்தார்.
-
Babar Azam keeping himself in the game at the non-striker's end.... #PMXIvPAK pic.twitter.com/bMZk2Nk7pi
— cricket.com.au (@cricketcomau) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Babar Azam keeping himself in the game at the non-striker's end.... #PMXIvPAK pic.twitter.com/bMZk2Nk7pi
— cricket.com.au (@cricketcomau) December 6, 2023Babar Azam keeping himself in the game at the non-striker's end.... #PMXIvPAK pic.twitter.com/bMZk2Nk7pi
— cricket.com.au (@cricketcomau) December 6, 2023
அதேநேரம் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை ஒரு நொடி மறந்து மூளை மங்கிய நிலையில் இருந்த பாபர் அசாம் தன்னை நோக்கி வந்த பந்தை கையால் தட்டி விட முயற்சித்தார். சட்டென சுதாரித்துக் கொண்ட பாபர் அசாம், தற்போது விக்கெட் கீப்பர் செய்யவில்லை விளையாடிக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து ரன் ஓடத் தொடங்கினார்.
இதைக் கண்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாபர் அசாமின் செயலை பார்த்து சிரித்தனர். இதனால் சிறிது நேரத்திற்கு மைதானமே சிரிப்பலையாக காணப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் பாபர் அசாமின் செயலை கண்ட பார்வையாளர்கள் பல்வேறு கலவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 89.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்து உள்ளது. அதிகபட்சமாக ஷான் மசூத் 156 ரன்களும், ஷர்பஸ் அகமது 41 ரன்களும் எடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க : தெலங்கானா முதலமைச்சர் பதவியேற்பு விழா! சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே பங்கேற்பு!