சில்ஹெட்: மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி சில்ஹெட் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பாக். வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக நிதா டார் 37 பந்துகளுக்கு 56 ரன்களையும், பிஸ்மா மரூப் 35 பந்துகளுக்கு 32 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த வகையில் 138 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கிவருகின்றனர். சேப்பினேனி மேகனா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தயாளன் ஹேமலதா, பூஜா வஸ்த்ரகர் விக்கெட்டுகளை இழந்து விட்டனர். தீப்தி சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் விளையாடி வருகின்றனர். 14 ஓவர்கள் முடிவில் 77 ரன்களை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தென் ஆப்ரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி... சாம்சனின் அதிரடி வீண்