கராச்சி: 7 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இதன் முதல் கிரிக்கெட் போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங்கை கையில் எடுத்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 68 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 159 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. இதனால் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.
இதையும் படிங்க: IND Vs AUS முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தோல்வியை தழுவிய இந்தியா