ராய்ப்பூர்: ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விளையாடி வருகிறது. இந்த தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி இன்று (டிசம்பர்.01) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியானது ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரமானது துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மின் கட்டணமானது செலுத்தவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில், சுமார் 3.16 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மைத்தானத்தின் மின் கட்டணம் ஏறத்தாழ 5 ஆண்டுகள் கட்டப்படாமல் உள்ளதால், கடந்த 2018ஆம் ஆண்டு மின்சாரமானது துண்டிக்கப்பட்டது. மைதானம் கட்டபட்ட நாளில் இருந்து இதன் பராமரிப்பு செலவை பொதுப்பணித்துறையிடம் ஓப்படைக்கப்பட்டது. மற்ற செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும்.
ஆனால் மின்சாரம் கட்டாமல் இரு துறைகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை பலமுறை மின்சார வாரித்திற்கு நோட்டீஸ் அணுப்பியும், இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இதற்கிடையில், சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோளின் படி ஒரு தற்காலிக மின்சார இணைப்பு வழக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பெட்டிகளில் மட்டுமே விளக்குகள் எரியும். மேலும், மைதானத்தில் உள்ள பிரம்மாண்ட விளக்குகள் ஜெனரேட்டர் மூலம் தடையின்றி செயல்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், மின்சாரம் இல்லாமலேயே இந்த மைதானம் 6 ஐபிஎல் போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச போட்டியை நடத்தி இருக்கிறது. ஆம் ஜனவரி மாதம் 21ஆம் தேதி நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதிக்கொண்ட ஒருநாள் போட்டி இந்த மைதானத்தில் தான் நடந்தது. மேலும், இன்று நடக்கவிருக்கும் சர்வதேச டி20 போட்டியே இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச டி20 போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடர் - இந்திய ஏ அணி அறிவிப்பு!